Monday, December 21, 2009

லெக் புல்லிங்..!! - 1

லெக் புல்லிங் பண்றதுக்கு பீரோ புல்லிங் மாதிரி கொஞ்ஜம் கவனம் தேவை...இல்லன்னா நம்ம லெக் காலி ஆயிடும்... அப்புறம் வடிவேலு மாதிரி
மல்லாக்க படுத்து விட்டத்த தான் பார்க்கனும்...இது நம்ம அன்றாட வாழ்க்கையில நடக்குறது தான்....சின்ன சின்ன பிட் பீஸ் தான் லெக் புல்லிங்... ஃபர்ஸ்ட் டாபிக்-னு தான் கொஞ்ஜம் பெரிய இண்ட்ரோ...பொறுத்துக்கோங்க...!!

முதல் புல்லிங் எங்க டீம் லீடர் ப்ரேம்-ல இருந்து ஆரம்பிப்போம்..!!
அவரு தான் அப்போ இல்ல இப்போ கூட இருக்குற ஒரே டைம் பாஸ். ;-)
எப்டியும் இதப் படிச்சுட்டு அவரு என்ன திரும்ப லெக் புல்லிங் பண்ணுவாரு, அரசியல்ல இதெல்லாம் சகஜம்-னு போறது தான நம்மோட பெருந்தன்மை..!!

அப்போ சென்னை டைடல் பார்க்-ல தான் ஆ(ப்)பீஸ்... விமல் புதுசா எங்க டீம்ல
சேர்ந்திருந்தான்..அவனும் டீம் லீடர் ப்ரேம் வீட்டு பக்கத்துலன்றதால, ஒன்னா தான் பைக்ல போவாங்க...பையன் வேலைக்கு சேர்ந்த புதுசுன்றதால ஆர்வக் கோளாரு, நிறைய கேள்வி கேட்டிருக்கான்...
மறுநாள் ஆ(ப்)பீஸ்ல...

ப்ரேம்: “இவன் எப்போ பார்த்தாலும் என் கிட்ட முட்டாள் தனமாவே கேள்வி கேட்குறான்டா.”

நான்: “உங்க கிட்ட அப்டி தான ப்ரேம் கேள்வி கேட்க முடியும்.”

கேட்ட மறுநொடி எங்க சீனியர் எஞ்ஜினியர் பாலா கொலைவெறியோட சிரிக்க, அடுத்த அரை மணி நேரம் ப்ரேம் கண்ணுல படாம எஸ்கேப்ப்ப்ப்ப்...தான்... :-)

1 comment:

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஒத்துக்கிறோம். நீ ரவுடி தான்