Sunday, March 23, 2008


மழை....

"தமிழகத்தில் இன்று பலத்த மழை..!!"
செய்தி கேட்டு விட்டு,
தற்செயலாய் என் வீட்டுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன்.
உண்மை தான்..!!!
நீ வந்து கொண்டிருந்தாய்..!!!




தேவதைப் பகுதி...!!

உன்னை நினைத்தவுடன்
என் இதயத்தில் ரத்த ஓட்டம்
கூடுகிறது....முதலில்
இதயத்தில்ஒரு Board வைக்க வேண்டும்,
" இது தேவதை நடமாடும் பகுதி
மெதுவாகச் செல்லவும்"-என்று..........

GUNகள்...!!!

உன்
ஒரே பார்வையில்
என்னை சுட்டு வீழ்த்தி விட்டாய்....!!!
உன்னிடம் இருப்பது
கண்கள் அல்ல....
GUNகள்...!!!


தனிமை கொடுமையா?

"தனிமை அவ்வளவு கொடுமையா?" என்றாய்.
நான் உன்னைக் காதலிப்பது போலவே
நீயும் என்னைக் காதலித்துப் பார்
அப்போது புரியும் உனக்கு....



காத்திருக்கிறேன்

உனக்கு
காத்திருப்பதை விட
உனக்கான வார்த்தைகளுக்கு
அதிகம் காத்திருக்கிறேன்....!!!

பழைய,விறகு வெட்டி கதை...

கோடாலியைத் தவற விட்ட விறகு வெட்டி ஒருவன் நதியின் கரையில் அழுது கொண்டிருப்பான். அவன் முன் திடீரென ஒரு தேவதை தோன்றி தங்கக் கோடாலி ஒன்றை நீடுவாள். அதை வாங்க மறுப்பான் அந்த விறகு வெட்டி.

உடனே ஒரு வெள்ளிக் கோடாலியை அவனுக்குத் தருவாள் அந்த தேவதை. அதையும் தன்னுடையது அல்ல என்று மறுப்பான் அவன்.

இறுதியில் அவனது இரும்புக் கோடாலியை அந்த தேவதை அவனிடம் கொடுக்கையில் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வான் அவன்.

அந்த விறகு வெட்டியின் நேர்மையில் மனம் மகிழ்ந்து மூன்று கோடாலியையும் அவனிடம் கொடுத்து விட்டு மறைந்து விடுவாள் அந்த தேவதை...

அப்படித்தான் நானும் ஒரு நாள் தனிமையில் அழுது கொண்டிருந்தேன்.
என் முன்னால் தோன்றினாள் என் தேவதை.!!

என்னை சில நொடிகள் உற்றுப் பார்த்தவள் "என் அழுகிறாய்??" என்றாள்.. அவள் குரலில் சற்றே கர்வமும், உரிமையும் தெரிந்தது. அவளிடம்

"என் இதயத்தைக் காணவில்லை" என்றேன். "உண்மையாகவா???" என்றாள்.

"என் இதயத்தின் மேல் சத்தியம்" என்றேன். திடீரென மறைந்து போனவள்,சில வினாடியில் மீண்டும் என் முன் தரிசனம் தந்தாள்.

"இந்த பிடி உன் இதயம்" என்றாள். உடனே அதை வாங்க கை நீட்டினேன். சட்டென என் கைகளைத் தட்டி விட்டாள்

"நீ இவ்வளவு பேராசைக்காரனா...!!! இது உன் இதயம் அல்ல.. என்னுடையது... இப்படி அடுத்தவர் இதயத்திற்கு ஆசைப் படுகிறாயே இது நியாயமா...?!?!" கோபமாய் கேட்டாள்...

"காதலில் இதயங்கள் மாறுவது தான் நியாயம்" என்றேன் அவளைப் பார்த்து...

சில நொடிகள் என்னையே முறைத்துப் பார்த்தவள் திடீரென மறைந்து விட்டாள், என் இதயத்தையும் அவளோடு எடுத்துக் கொண்டு....!!!


Love--undefined

Love என்ன city bus-ஸா
வடபழனி வழியா வரும்னு சொல்றதுக்கு...!!!
Love-லாம் SuperStar மாதிரி...
எப்போ வரும்,எப்டி வரும்னு
யாராலும் சொல்ல முடியாது. ஆனா
வர வேண்டிய நேரத்துல கரெக்ட்-ஆ வரும்....!!!
சில நேரம் Metro Water மாதிரி
வரக்கூடா நேரத்துல கூட வரும்......undefined...


தனிமை...

தனிமை கேட்டேன்,
இந்த உலகை மறக்க.....
நீயோ
எனக்கு உன்னைத் தந்து விட்டாய்...!!!
இப்போது நான்
என்னை மறந்துவிட்டேன்....!!!

மோட்சம்...

உன் உதடுகளின் பள்ளங்களில்
விழுந்து,உருண்டு, எழுந்து,
உன் எச்சில் தீர்த்தம் பட்டு
மோட்சம் அடையக் காத்திருக்கிறது
என் பெயர்...சீக்கிரம் கூப்பிடு...

valentines day....

பூமிக்கு வலிக்குமோ என்று
வழக்கம்போல் மென்மையாய் நடந்து வந்த உன்னை
வேகமாய் நெருங்கினேன்.
"ஏன் இப்பிடி பண்ற நீ? கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு?' என்றேன்.
ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று பயந்து போய்
'என்ன ஆச்சு? நான் என்ன பண்ணேன்?' என்று
பதட்டமாய் கேட்டாய்.
"இன்னைக்கு என்ன day....valentines day....
பசங்க எல்லாம் ரோஸ் கிடைக்காம அலையுறாங்க..
இப்பிடி ஒரு bouquet-ஏ தனியா வந்தா சும்மா விடுவாங்களா!!
சீக்கிரமா வீட்டுக்கு போய் கதவ பூட்டிக்கோ' என்றேன் .
அவ்வளவு தான்.....கையில் இருந்த குடையை ஓங்கினாய் என்னை அடிக்க..... "விடு ஜூட்...."

ஊர் சுற்றும் காதல்...

இன்று உன்னைப் பற்றி ஒரு கவிதை
எழுதியே விடுவது என முடிவு செய்தேன்..!
என் அறையின் ஜன்னல் பகுதி தான்
சரியான இடம் என்று
paper பேனாவுடன் ஜன்னல் அருகில் அமர்ந்தேன்..
உனக்காக
காடு, மலை, கடல்,ஆறு,
park, beach, காஷ்மீர், ஊட்டி,
யாரும் இல்லா railway station,
நெடுஞ்சாலை tea கடை, bike ல் ஒரு long drive
எல்லாம் கனவிலேயே போய் திரும்பி விட்டேன்...!!
இன்னும் கவிதை வந்த பாடில்லை...
நீ மட்டும் தான் நினைவில் இருந்தாய்...!!
வேறென்ன யோசிக்கலாம் என்று நினைத்த போது
உள் மனது திடீரென்று கத்தியது , முட்டாளே..!
அவளே உன் நினைவில் இருக்கும் போது
உனக்கு கவிதை எதற்கென்று..!!
நியாயம் தான்.........
Paper பேனாவை தூக்கி எறிந்து விட்டு
உன் நினைவில் இருக்கத் தொடங்கி விட்டேன்..!!

வானவில் பெண்..!!!

மழை தூறும் அந்த மாலை வேளையில்
விரைந்து கொண்டிருக்கும் கருப்புக் குடைகளின் நடுவே,
கையில் கலர் குடையுடன் என் அருகில் நடந்து வந்தாய்....
"என்ன மழை பெய்யும் நேரத்தில்
வானவில்லை கையில் பிடித்திருக்கிறாய்" என்றேன்..
"என்னிடம் ஏதாவது சொல்லவில்லையெனில் உனக்கு தூக்கம் வராதே.." என்று சொன்னாய் சின்ன வெட்கத்துடன் ...!!
என்ன அதிசயம்...!!!
உன் கையில் இருந்த வானவில்
மெலிதாய் உன் முகத்தில் படரத் துவங்கியது...!!!!



மழையின் கோபம்..!!!

உன்னை எப்படியும் நனைத்து விடும்
நோக்கத்தில் அந்த மழை
உன்னைத் துரத்திக்கொண்டே வந்தது..!!
நான் ஒதுங்கி நிற்பது கண்டு நீயும்
அந்த பேருந்து நிறுத்தத்தின் நிழற்க் குடையினுள்
நுழைந்து விட்டாய்..!!
நீ உன் குடையை மடக்க எத்தனிக்கையில்
அப்போது வீசிய பலத்த காற்றுடன்
உன் குடை அடித்துச் செல்லப்பட.....
உனக்குப் பிடித்த என்னை
அடிக்க முடியாத கோபத்தில் (!!) பாவம்...
தூரத்தில் உன் குடையை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தது
அந்த மழை...!!!



துளி துளியாய்...!!

உன் குடையில் இருந்த ஒரு
துளை வழியே உள்ளே நுழைந்து
உன்னை நனைத்து விட மழைத் துளிகளுக்குள் ஒரு போட்டி
நீ நான் என்று போட்டி போட்டு
ஒன்றையொன்று தள்ளி விட்டுக் கொண்டதில்
எதுவுமே உன்னை நனைக்கவில்லை
உன் வீடு வந்தவுடன் குடையை மடக்கி உதறி விட்டு
உள்ளே சென்றாய்...
பாவம் மழைத் துளிகள்
இன்னும் உன் வீட்டு வாசலிலேயே தவம் செய்கின்றன...!!!


மழைக் கவிதை..!!!

உன்னை நனைக்க முடியவில்லை
என்ற கோபத்தில்,
வழியில் போகிற அனைவரையும்
அடித்துவிட்டு செல்கிறது இந்த மழை...!!!

நீ குடை பிடித்து போவதில்
அந்த மழையின் அழுகை இன்னும்
கூடி கொண்டே போகிறது....
குடையை மடக்கி விடு...
இல்லை எனில் சீக்கிரம் வீட்டுக்கு போய் விடு...
உன்னால் நாங்கள் வீட்டுக்கு போக முடியவில்லை.....!!!