Monday, January 5, 2009

நீ சென்ற பின்னும்,
என் அறையில்
நீ விட்டுச் சென்ற உன் வாசத்தில்
உயிர் வாழ்ந்து கொண்டிருப்பேன் நீ வரும் வரை...

Sunday, January 4, 2009

பிரிவின் போது முத்தங்கள் மட்டுமே
காதலை அதிகமாய் உணர்த்துகின்றன.
பிரிவின் முன்
பரிமாறிக் கொண்ட முத்தத்தில் ஒட்டிக் கொண்ட
நம் உதடுகளைப் பிரிக்க கொஞ்சம் அதிகமாய் தான்
கஷ்டப்பட்டோம் நீயும், நானும்.

Saturday, January 3, 2009

என்னை விட்டுச் செல்லும்
போது என் உயிரையும் உன்
கைப் பையில் போட்டு எடுத்துச்
செல்லும் வித்தையை எங்கே கற்றுக் கொண்டாய்..!!!
பிரிவின் போது
நீ என் உதட்டில்விட்டுச் சென்ற
முத்தங்கள் தான் இன்னும் என்
இதயத்தைத் துடிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன..
நீ என்னுடன் இல்லாத ஒரு விடுமுறை நாள்...
வழக்கத்தை விட தாமதாமாய் எழுந்தேன்
வாசலில் கிடந்த செய்தித்தாளை எடுக்க மனமில்லை
காலை உணவு உண்ண விருப்பமில்லை
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிடிக்கவில்லை
கதவுகளை மூடிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டேன்
மனம் கனமாய் இருந்தது
நினைவெல்லாம் நீ தான் நிறைந்திருந்தாய்
நீ இல்லாத வாழ்வு எவ்வளவு கொடுமை என்று சலித்துக் கொண்டேன்
அன்று இரவு சீக்கிரமே தூங்கி விட்டேன்
மறுநாள் விழிக்கையில் வீட்டில் உன் நடமாட்டம் கண்டு
என் அன்றாட வாழ்க்கை மறுபடியும் கிடைத்து விட்டதில் புன்னகைத்துக் கொண்டேன்
நீ வந்து விட்ட மகிழ்ச்சியில் சிறிது நேரம் நிம்மதியாய் உறங்கத் துவங்கினேன்.
உன்னைப் பிரியும் நாட்களில்
எனக்காய் துடிப்பதை விட என்
இதயம் உனக்காகத் தான் அதிகம்
துடிக்கிறது...
நம்மைப் பிரித்து சிரிக்கும் இந்த
விடுமுறையை எதைக் கொண்டு வெல்வது.
என்னைப் பார்க்க வராதே..
பிரிந்து செல்..
ஊரை விட்டுப் போ..
அடுத்த பத்து நாட்களுக்கு இங்கே வராதே...
பதினொன்றாம் நாள் நீ என் பிரிவின் வலியை உணர்ந்தால்
உடனே என்னிடம் திரும்பி வந்து விடு,
என்னைக் கட்டிக் கொண்டு முத்தமிடு, உனக்கு சலித்துப் போகும் வரை...
நான் உன்னை காதலிப்பேன் என் மரணம் என்னைத் தொடும் வரை...