Tuesday, September 30, 2008

உன் ஜாதகம் பார்க்க
உன் இதழ் ரேகையைப் பார்த்தால்
எல்லா இடங்களிலும் மன்மதனே இருக்கிறான் ...

என் பேனாவில் மை ஊற்றினால்
அது உன் மேல் உள்ள மையலை மட்டுமே
எழுதுகிறது, தீராமல்...

நீ புருவம் உயர்த்தி என்னை
சந்தேகமாய் பார்க்கும் அழகிற்காகவே
புதிது புதிதாய் பொய்களைக் கண்டுபிடித்துச்
சொல்கிறேன் உன்னிடம்...

"ஏன் என்னைக் காதலிக்கிறாய்?" - காரணம் கேட்டாய்
"ஏன் உன்னை நான் காதலிக்கக் கூடாது.?" - திருப்பிக் கேட்டேன்.
திருப்பி எதுவும் பேசாமல் போனாய்.. ஆனால் திரும்பிப்
பார்த்துக் கொண்டே தான் போனாய்...

No comments: